Latest News

February 08, 2012

அப்துல் கலாம் facebook
by admin - 0


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தற்போது பேஸ்புக்கிலும் கலக்க ஆரம்பித்துள்ளார். இன்றைய இளைஞர்களின் முகமாக மாறிப் போயுள்ள பேஸ்புக்கில் கலாமின் கருத்துக்கள் அவ்வப்போது இடம் பெற்று அவரது ரசிகர்களை குஷிப்படுத்த ஆரம்பித்துள்ளது.

இந்தியாவில் இந்த பேஸ்புக் செம ஹிட்டாகியுள்ளதாம். கலாம் தொடர்பாக ஏற்கனவே பல பேஸ்புக் பக்கங்கள் இருந்தாலும், அதிகாரப்பூர்வமாகவே தானே பேஸ்புக் குளத்தில் குதித்துள்ளார் கலாம்.

http://www.facebook.com/OfficialKalam என்பதுதான் கலாமின் பேஸ் புக்க முகவரியாகும். உருவாகி சில தினங்களே ஆனாலும் கூட விருப்பதாரர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் தாண்டி ஓடி விட்டது.

தான் பங்கேற்ற நிகழ்ச்சிகள், அதில் பேசிய பேச்சுக்கள், அது தொடர்பான புகைப்படங்கள், இளைஞர்களுக்கும் இந்தியர்களுக்கும் தன்னம்பிக்கையூட்டும் வாசகங்கள் என தனது ஸ்டைலில் கலக்கிக் கொண்டிருக்கிறார் கலாம் இந்த பேஸ்புக்கில்.

தான் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விடை பெற்று ராஷ்டிரபதி பவனிலிருந்து வெளியேறியபோது, அதுதொடர்பாக பத்திரிக்கை ஒன்றில் வெளியான கார்ட்டூனையும் கூட போட்டு அசத்தியுள்ளார் கலாம்.

ரொம்ப அருமையாக உள்ளது இந்த பக்கம், போய் ஒரு எட்டுப் பார்த்து விட்டு வாருங்கள்
« PREV
NEXT »

No comments