Latest News

February 07, 2012

கோச்சடையானில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
by admin - 0



ரஜினி நடிக்க இருக்கும் கோச்சடையான் படத்தில் அவருக்கு ஜோடியாக, ஏற்கனவே ராணா படத்தில் நடிக்க ஒப்பந்தமான தீபிகா படுகோனேயே நடிக்க இருப்பதாக அ‌திகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராஸ் இன்டர்நேஷனல் மற்றும் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயிண்மென்ட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து பிரம்மாண்ட பொருட்ச் செலவில் தயாரிக்கும் படம் கோச்சடையான். இப்படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்க, திரைக்கதை அமைத்து சவுந்தர்யாவுக்கு உதவுகிறார் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

சமீபத்தில் தான் இப்படத்தின் பூஜை தொடங்கியது. ஆனால் ரஜினிக்கு ஜோடியாக யார் என்பது மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. அவருக்கு ஜோடியாக பாலிவுட் குயின் கத்ரீனா கைப்பை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது. இந்நிலையில் ஏற்கனவே ராணாவில் நடிக்க ஒப்பந்தமான தீபிகா படுகோனேயை இப்படத்திலும் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இப்படத்தின் இயக்குநரும், ரஜினி மகளுமான சௌந்தர்யா அஸ்வினே தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கோச்சடையானில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், சினேகா உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திர பட்டாளங்களும் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments