Latest News

February 09, 2012

பழைய மியூசிக் பூச்சி படிமம் கண்டுபிடிப்பு
by admin - 0

வடகிழக்கு சீனாவில் 16.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பூச்சி படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மற்றும் ப்ரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் அரிய கண்டுபிடிப்பாகும்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகையில், ஜுராசிக் காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மிகச்சிறிய பூச்சியின் படிமம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது 16.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.நுண்ணிய தொழில்நுட்ப சாதனங்களை கொண்டும் ஆர்க்கபோய்லஸ் என்ற பண்டைய இசை ஆராய்ச்சியாளர்களின் உதவியுடனும் படிம நிலையில் இருந்த பூச்சியின் ஒலி குறித்து ஆராயப்பட்டது.

மேலும் இந்த பூச்சி உற்சாகமான ஒலிக்கு சொந்தமானது என்றும், அந்த ஒலிதான் உலகின் மிக தொன்மையான இன்னிசைக்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது. இதுகுறித்த தொடர் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.


« PREV
NEXT »

No comments