Latest News

February 09, 2012

பிரதமர் விருந்தில் தனுஷைத் தொடர்ந்து ஸ்ருதி
by admin - 0

3 படத்தில் இடம்பெற்றுள்ள கொலவெறி பாடலை பாடியதின் மூலம் பலரது கவனத்தையும் கவர்ந்த தனுஷுக்கு சில நாட்களுக்கு முன் இந்திய பிரதமர் விருந்தளித்தார். ஜப்பானிய பிரதமர் இந்தியாவிற்கு அளித்த விசிட்டின் போது, ஜப்பானிய பிரதமருக்கு அளிக்கப்பட்ட விருந்தில் தனுஷ் கலந்துகொண்டார்.
சினிமா உலகில் இந்த செய்தி சில நாட்களுக்கு பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது 3 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ஸ்ருதிஹாசன் ஒரு விருந்துக்கு பிரதமரால் அழைக்கப்பட்டிருக்கிறார்.




மொரீசியஸ் பிரதமர் இந்தியாவிற்கு வர இருக்கிறார். மொரீசியஸ் பிரதமருக்கு அளிக்கப்படும் விருந்தில் கலந்து கொள்ள கொலவெறி நாயகிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தில் கலந்து கொள்வது பற்றி ஸ்ருதிஹாசன்

“ என் வாழ்க்கையில் சிறந்த விருந்தாக இதைக் கருதுகிறேன். பிரதமரிடமிருந்து அழைப்பு வந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.” என்று பேசியதாக கூறுகின்றனர். ஸ்ருதிஹாசனுடன் இந்தி நடிகர் இம்ரான் கானுக்கும் ஆழைப்பு வந்திருப்பதாக தெரிகிறது.
« PREV
NEXT »

No comments