Latest News

February 23, 2012

கிளிநொச்சியில் குடி நீர்த் திட்டம்
by admin - 0


கிளிநொச்சி மாவட்டத்தில் குடி நீர்த் திட்டம் ஒன்றை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம் அப்பிரதேசத்துக்கான நீர் வழங்கல் மற்றும் நீர் சுத்தப்படுத்தல் என்பன மேற்கொள்ளப்படவுள்ளதுடன் 42 கிலோ மீற்றர் பிரதேசம் உள்ளடக்கப்படும் வகையில் 14 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் மக்கள் இதன் மூலம் நன்மைடைவார்கள் என்று பதில் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக 677 மில்லியன் யென் செலவிடப்படவுள்ளது. ஜப்பானின் ஜசூக்கா நிறுவனம் இதற்கான நிதியுதவியை வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே பதில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments