Latest News

February 17, 2012

யுத்த களமாக மாறியுள்ள புறக்கோட்டை! ஜயலத் எம்பி தலையில் கண்ணீர் புகை
by admin - 0

ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு புறக்கோட்டையில் ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துரத்தி துரத்தி கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர்.

சில ஆர்பாட்டக்காரர்கள் பொலிஸாரை நோக்கி தமது கையில் கிடைத்தவற்றை வீசி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கண்ணீர்புகை பிரயோகத்திற்கு பயந்து ஆர்பாட்டக்காரர்கள் புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு உள்ளே பிரவேசித்துள்ளதாக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, சற்று முன்னர் கிடைத்த தகவல்படி ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தலையில் அடிவிழுந்த அவர் மயங்கி விழுந்ததாகவும் செய்தியாளர் குறிப்பிட்டுகின்றார்.Get cash from your website. Sign up as affiliate.
« PREV
NEXT »

No comments