சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில், சசிகலா நேற்று இரவு உருக்கமாக வழிபட்டார்.
சென்னை, திருவான்மியூர் கலாஷேத்ரா காலனி அருகில் பாம்பன் சுவாமி கோவில் உள்ளது. மயூரபுரம் என அழைக்கப்படும் அந்த இடத்தில் பாம்பன் சுவாமியின் ஜீவ சமாதி உள்ளது.
இந்த கோவிலில் பக்தர்கள் கேட்டது கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளது. வி.ஐ.பி.,க்கள் பலர் இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.
அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவும் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த கோவிலுக்கு வந்தார். அவருடன் ஒரு பெண் உதவியாளர் வந்திருந்தார்.
சாமி கும்பிட்டு விட்டு இரவு 9 மணியளவில் கோவிலிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், சீருடை அணியாமல் மப்டியில் அவரது காரில் வந்து சென்றார்.
No comments
Post a Comment