Latest News

February 20, 2012

நட்சத்திரங்கள் அழிவடையுமா?
by admin - 0


அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி விண்வெளிகள் ஆய்வு மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஹப்பிள் டெலஸ்கோப் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பூமியில் இருந்து 29 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள விண்மீன் கூட்டத்தில் கருப்பு நிற ஓட்டை இருப்பதை கண்டுபிடித்தனர். இது குறித்து தீவிரமாக ஆராய்ச்சி செய்தனர்.மேலும் இந்த ஓட்டை ஏற்பட்டதன் மூலம் சிறிய விண் மீன்கள் அழியும் ஆபத்து ஏற்படும். இந்த விண் மீன்கள் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை. தொடக்கத்தில் சிறிய விண்மீன்களை துவம்சம் செய்யும் கருப்பு நிற ஓட்டை மெல்ல மெல்ல பெரிய விண் மீன்களையும் அழிக்கும் ஆபத்து உள்ளது என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments