Latest News

February 22, 2012

இந்தியா முழுவதும் படப்பிடிப்பு சினிமா காட்சி ரத்து
by admin - 0

மத்திய அரசின் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா முழுவதும் திரையுலகம் சார்பில் நாளை (வியாழக்கிழமை) வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. படப்பிடிப்புகள் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னையில், பொதுக்கூட்டம் நடக்கிறது.

இதுபற்றி இந்திய திரையுலக சம்மேளன தலைவர் வினோத் கே.லம்பா கூறியதாவது:


திரையுலகம் ஏற்கனவே ஏராளமான பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. ஏறக்குறைய 95 சதவீத படங்கள் தோல்வி அடைகின்றன. 5 சதவீத படங்கள்தான் வெற்றி பெறுகின்றன. சினிமாவுக்கு ஏற்கனவே பொழுதுபோக்கு வரி விதிக்கப்பட்டு வருகிறது. எனவே சேவை வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.


சேவை வரியை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும் இந்திய திரையுலக சம்மேளனம் ஒரு முழுமையான போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருக்கிறது.


இதற்காக, நாளை (வியாழக்கிழமை) இந்தியா முழுவதும் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்படும். ஸ்டூடியோக்கள் மூடப்படும். படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். திரையுலகம் சம்பந்தப்பட்ட அத்தனை அமைப்புகளும் நாளை ஒரு நாள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

இந்த போராட்டத்துக்கு சின்னத்திரை தயாரிப்பாளர்களும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.'' இவ்வாறு வினோத் கே.லம்பா கூறினார்.



« PREV
NEXT »

No comments