Latest News

February 14, 2012

கமலுக்காக ஏங்கும் அசின்
by admin - 0


தசாவதாரத்தில் கிடைத்த மாதிரி கமலுடன் நடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன், என்று அசின் கூறியுள்ளார்.

தமிழில் உச்சத்தில் இருந்தபோது, வந்த வாய்ப்புகளை உதறிவிட்டு மும்பைக்குப் போய் செட்டிலானவர் அசின். இப்போது இரண்டு மூன்று இந்திப் படங்களில் நடித்தாலும், தமிழில் பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்வதில் ஆர்வம் காட்டுகிறார்.

ரஜினியின் கோச்சடையானில் ஹீரோயின் உறுதி செய்யப்படாமல் இருந்த போது, ரஜினியுடன் நடித்தால் சந்தோஷப்படுவேன், வாய்ப்பு கிடைக்குமா? என்று ஒரு கல் விட்டுப் பார்த்தார். ஆனால் அங்கு தீபிகா படுகோன் வந்துவிட்டார்.

இந்த நிலையில், கமல் - ஷங்கர் - ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது.

இந்தப் படத்தில் அசின் நடிப்பதாக சிலர் 'கிளப்பிவிட்டிருந்தனர்.' ஆனால், அது வெறும் புரளி என அசின் தெரிவித்துள்ளார் (இவரே சொல்லியிருப்பாரோ!).

அவர் மேலும் கூறுகையில், "தசாவதாரத்தில் கமலுடன் நடித்தது மறக்கமுடியாதது. மீண்டும் அதுபோன்ற வாய்ப்பு வந்தால் மகிழ்வேன்.இப்போதைக்கு பேஸ்புக்கில் 'டச்'சிலிருக்கிறோம்", என்றா
« PREV
NEXT »

No comments