Latest News

February 05, 2012

செருப்படி வேண்டிய ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ மூன்
by admin - 0


ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூன் மீது காசாவில் செருப்பு வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலில் சிறைப்பட்டிருக்கும் பலஸ்தீனியர்களின் உறவினர்கள், காசாவுக்குள் நுழைய முயன்ற போதே, பான்கீமூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகளை வீசி எறிந்தனர்.

அவர்கள் சிறையில் இருக்கும் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களை ஏந்தி, "இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்தது போதும்..." என்று எழுதப்பட்டிருந்த போஸ்டர்களை பான்கீமூனிடம் காண்பித்தனர்.

பாதுகாப்புப் படையினர் அவர்களை அங்கிருந்து போகும்படி கூறிய போது, "இஸ்ரேல் சிறையில் வாடும் பலஸ்தீனியர்களை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கவே, பான்கீமூனைச் சந்திக்க வந்தோம்" என்று போராட்டக்காரர்களின் செய்தித் தொடர்பாளர் ஜமால் பர்வானா தெரிவித்தார்.

இஸ்ரேலில் சுமார் 7 ஆயிரம் பலஸ்தீனியர்கள் சிறையில் வாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments