Latest News

February 12, 2012

செம்மறியாடுகள் வளர்ப்ப அருகி வருகின்றது- பேராசிரியர் மிகுந்தன்
by admin - 0


இலங்கை மத்திய வங்கியின் வடமாகண செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தின் பொருளாதார நிலைமை பற்றிய ஆய்வு பற்றிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மகிந்ந ராஜபக்சவின் அரசினால் கடந்த கால முற்றாக மாற்றப்பட்ட சமாதான சூழலில் வாழ்ந்து வருகின்றோம்.
இருந்தும் எமது பொருளாதார வளங்களின் பயன்பாடு, வியாபார நிலை என்பன மிகவும் பின்தங்கிய நிலையிலே காணப்படுகின்றன.
ஆனால் இழந்த வளங்களையும், பின்தங்கிய பொருளாதாரத்தையும் மீளப்பெறுவதற்குரிய சாதகமான சூழல் காணப்படுகின்றது.
உள்ளுர் உற்பத்தி பொருட்களுக்கு முக்கியத்துவம் வழங்கி உற்பத்தியாளர்களின் வியாபார நிலையை வளர்க்க வேண்டும்.
ஆரம்ப காலத்தின் எமது மக்களின் விவசாய நடவடிக்கைகளில் உற்பத்திகளை பெருக்கக்கூடிய நவீன தொழில் நுட்பமுறை, நவீன இயந்திர முறைமை காணப்படவில்லை.
தற்போது நவீன முறைகளை பயன்படுத்தி அதிக உற்பத்திகளை செய்யக்கூடிய நிலைமை காணப்படுகின்றது.
எனவே தற்காலத்தில் அதிக உற்பத்தியை தரக்கூடிய தரம் மிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாக நிலையை உயர்த்த முடியும்.
தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதிக வருமானத்தை ஈட்டுக்கூடிய வகையில் 40 மூலிகைகள் இனங்காணப்பட்டுள்ளன. இதனை உரியவர்கள் மூலம் இனங்கண்டு உற்பத்தி, ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கான செயற்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும் பனை உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டவர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்ற எமது மக்கள் வாங்குவதில் அக்கறை காட்டி வருகின்றனர். இப் பொருட்களை உற்பத்தியாக்கும் போது நவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி உற்பத்தி செய்வதன் மூலம் இப் பொருட்களை கவர்சிகராமான முறையில் சந்தைப்படுத்துவதற்கு உதவியாக அமையும்.
பழவகையான உற்பத்திப் பொருட்களை பழங்களாகவே விற்பனை செய்வதைத் தவிர்த்து தகரத்தில் அடைத்து ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும்.
எமது இடத்தில் உற்பத்தி செய்யப்படும் 50 வீதமான பொருட்கள் மரபணு மாற்றத்திற்கு உள்ளாக்கப்படுகின்றது.
அதே போன்று கால்நடை வளர்ப்பில் செம்மறியாடுகள் வளர்ப்ப அருகி வருகின்றது. மீண்டும் வளர்ப்பில் ஈடுபடவேண்டும்
புதிய கண்டு பிடிப்புக்கள் எமது மாகணத்தில் உள்ள பல்கலைக்கழகம் சார்ந்தவர்கள், புத்திஜீவிகள் போன்றவர்களால் நிகழ்த்தப்படவேண்டும்.
இவ்வாறு புதிய கண்டுபிடிப்புக்கள் கண்டு பிடிப்பது குறைவாக காணப்படுகின்றது. ஆனால் தமிழ் நாட்டில் புதிய கண்டு பிடிப்புக்கள் பல்கலைக்கழகங்களால் கண்டு பிடிக்கப்பட்டு விவசாயத்துறை வளர்ச்சியடைந்த வருகின்றது,
எனவே இவ்வாறான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எமது மக்களின் வாழ்வாதர நிலையை உயர்த்த முடியும். தற்போது முக்கிய பிரச்சினையாக வேலையில்லா பிரச்சினை உள்ளது. இவ்வாறான திட்டநடவடிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் இதற்கு தீர்வுகாண முடியும் எனவும் மேலும் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments