Latest News

February 15, 2012

மீண்டும் ஒரு ஆட்டம்!! உலா வருகிறான் நிர்வாண மனிதன்!!
by admin - 0


கிளிநொச்சி சாந்தபுரக் கிராமத்தில் நிர்வாணமான நிலையில் மர்ம மனிதன் நடமாடுவதாகவும், இரவு வேளைகளில் விடுகளுக்குள்நிர்வாணமான நிலையில் நுழைவதாகவும் அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் இரவு வேளைகளில் விடுகளுக்குள் நுழைதல் , நிர்வாணமாக நடமாடுவது அப்பகுதி மக்களால் அவதானிக்கப்பட்டு அவனை துரத்திச் செல்லும்போது இராணுவத்தினரின் முகாம்களை நோக்கி ஓடி மறைவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றார்கள். மேலும் மர்ம மனிதனின் நடமாட்டம் தொடர்பாக அப்பகுதி இராணுவத்தினரிடம் தெரிவித்தால் தமக்கு இது தொடர்பில் எதுவும் தெரியாது என தெரிவித்ததாகவும் அவ்வாறானவர்களை பிடித்து தம்மிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனர்.

சாந்தபுரம் கிராமத்தில் கடந்த சில வராங்களாக இந்த மர்மமனிதன் நடமாட்டம் இடம்பெற்று வருகின்றது. அதிகாலை வேளையில் நிர்வாணமாகவும் சிலசமயம் காற்சட்டையுடனும், இந்த மர்மமனிதன் வீடுகளிற்குள் நுழைகின்றான். மக்கள் துரத்திச் செல்கின்றபோது, இராணுவத்தினரின் காவலரண்களை நோக்கி ஒடிவிடுகிறான். இதேவேளை கிராமத்திற்குள் செல்லுகின்ற சகல வீதிகளிலும் படையினர் காவலில் காவலில் உள்ள நிலையில் வெளிநபர்கள் எவரும் நுழைய முடியாதது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
« PREV
NEXT »

No comments