Latest News

February 15, 2012

சிலாபத்தில் துப்பாக்கிச் சூடு:மீனவர் பலி
by admin - 0


இலங்கையில் எரிபொருட்களின் விலையை அரசு கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஏற்றியதை அடுத்து நாட்டின் பல பகுதிகளில் வன்முறையுடன் கூடிய போராட்டங்களை இடம்பெற்று வருகின்றன.
அதிலும் குறிப்பாக மண்ணெண்ணையில் விலை ஐமப்பது சதவீதம் உயர்ந்துள்ளது.
நாட்டின் மேற்குக்கரைப் பகுதியில் நடைபெற்ற ஒரு போராட்டத்தை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் உயிரிழந்துள்ளார். தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற மிகப்பெரும் பேரணி மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
மேற்குகரையிலுள்ள மீனவ நகரமான சிலாபத்தில் தொடர்ந்து எதிர்ப்புகளும், வீதித்தடைகளும் நிலவுகின்றன.
அப்பகுதியில் பெண்கள், சிறார்கள் உட்பட சுமார் ஐயாயிரம் பேர் புதன்கிழமையன்று எதிர்ப்பு பேரணியில் பங்குபெற்றனர்.
போராட்டக்காரர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 வயதான மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார் எனவும், மூன்று அல்லது நான்கு பேர் காயமடைந்தனர் எனவும் உள்ளூர்வாசி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அரச கட்டிடங்களை பொதுமக்கள் சேதப்படுத்தியதை அடுத்து, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதாகவும், அதற்கு பிறகும் அமைதி ஏற்படாததாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் கூறுகிறார்கள்.
realptr.com



தொடரும் பதற்றம்
சிலாபம் பகுதியில் சுமார் 15,000 பேர் கூடியுள்ளதாகவும், கடற்கரைப் பகுதியில் காவல்துறையினரும் இராணுவமும் குவிந்துள்ளதாகவும், கத்தோலிக்க பாதிரியார்கள் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையில் இறங்கையுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததாலேயே தாங்கள் இந்த விலையேற்றத்தை செய்ய வேண்டியதாயிற்று என்று அரசு கூறுகிறது.
எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து பேருந்து கட்டணங்கள் இருபது சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
இதனிடையே வீடுகள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான கட்டணத்தின் மீதான உபரிக் கட்டணமும் பெருமளவில் உயர்ந்துள்ளது.
இலங்கையில் மிகவும் வரிய நிலையிலுள்ள மலையக மக்கள் மண்ணெண்ணையின் விலையுயர்வால் மிகக் கடுமையாக பாதிக்கபப்ட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
« PREV
NEXT »

No comments