Latest News

February 07, 2012

பாலகுமாரும் யோகியும் உயிருடன் உள்ளதாக செய்தி கசிந்துள்ளது
by admin - 0


சமீபத்தில் இந்தியாவில் இருந்து வெளியாகும் டெக்கன் குரோனிக்கல் என்னும் செய்திச் சேவைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய கோத்தபாய ராஜபக்ஷ, தமக்கு பாலகுமார் எங்கே இருக்கிறார் அவருக்கு என்ன ஆனது எனத் தெரியாது என்று தெரிவித்திருந்தார். ஆனால் வி.பாலகுமார், யோகி, மற்றும் திலகர் ஆகியோர் உயிருடன் இருப்பதாக இராணுவ உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஸ்ரீலங்கா காடியன் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள புறநகர்ப் பகுதி ஒன்றில் இவர்கள் இராணுவத்தின் அதி உச்ச பாதுகாப்போடு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின்போது புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான திரு.பாலகுமார் அவர்கள், யோகி, திலகர், பாப்பா மற்றும் கவிஞர் புதுவை ரத்தினதுரை ஆகியோர் சரணடைந்த நிலையில் இவர்கள் ஒரு பஸ்ஸில் ஏற்றப்பட்டு இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்(இதனைக் கண்ணால் கண்ட சாட்சிகளும் உள்ளனர்). இவர்களில் பாப்பா அவர்கள் பின்னர் இராணுவத்துடன் இணைந்து செயல்பட விரும்பியதால் அவரை இராணுவம் விடுவித்துள்ளது எனவும், மீதமுள்ள அனைவரையும் இலங்கை இராணும் இன்னும் அடைத்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் திரு.பாலகுமார், திரு.புதுவை ரத்தினதுரை ஆகியோரின் உடல் நிலை மிக மோசமாக உள்ளதாகவும், அவர்கள் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை இராணுவமானது இவர்கள் அனைவரையும் சித்திரவதைக்கு உள்ளாக்கியதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். குறிப்பாக திரு.பாலகுமார் அவர்களை இலங்கை இராணுவம் படுகொலைசெய்துவிட்டது என்ற செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தது யாவரும் அறிந்ததே. இந் நிலையில் இச் செய்திகள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
« PREV
NEXT »

No comments