நடிகை அமலா பால் என்ற பெயரைக் கேட்டாலே 'களவாணி' ஓவியா டென்ஷனாகி விடுகிறார்.
அமலா பால் பற்றி அவரிடம் யாராவது பேசினாலே, என்கிட்ட அவரைப் பற்றி பேசாதீங்க என்று பொறிந்து தள்ளுகிறார். அம்மணி இவ்வளவு கோபபப்டும்படி 'மைனா' என்ன செய்ததோ தெரியவில்லை.
சரி ஓவியாவுக்கு தான் அமலா மீது கடுப்பு என்றால் மலையாளத் திரையுலகில் உள்ள பல கதாநாயகிகளுக்கும் 'மைனாவை' சுத்தமாகப் பிடிப்பதில்லையாம். அவர் பெயரைச் சொன்னால் கூட பலரது முகங்களில் எள்ளும், கொள்ளும் வெடிக்கிறது. அமலாவைப் பற்றி பேசுவதென்றால் இடத்தை காலி செய்யுங்கள் என்று கூறிவிடுகிறார்களாம்.
இப்படி மலையாள நாயகிகள் சக நாயகியான அமலா பாலை வெறுப்பது ஒரு புறம் இருக்க டோலிவுட்டில் இன்னும் நம்பர் 1 நடிகையாக இருக்கும் நடிகை அனுஷ்காவுக்கு அமலா பால் என்றால் ரொம்ப இஷ்டம். தெய்வத் திருமகளில் நடித்ததில் இருந்தே இருவரும் மிகவும் நெருங்கியத் தோழிகளாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் தன்னால் நடிக்க முடியாத வாய்ப்பு ஏதாவது வந்தால், அதை அமலா பாலுக்கு ரெக்கமன்டேஷன் செய்கிறாராம் அனுஷ்கா.
ஒருத்தொருக்கொருத்தவர் இப்படித்தான் ஒத்தாசையா இருக்கணும்...!
No comments
Post a Comment