Latest News

February 24, 2012

இலங்கைப் பெண்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது
by admin - 0

நாட்டிலுள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் 80 வயதாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது. இதுவரையில் கிடைக்கப்பெற்ற தரவுகளுக்கு அமைய ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 74 வயதாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவிக்கின்றது.

அடுத்த 20 வருடங்களில் நாட்டிலுள்ள ஆண் பெண் சராசரி ஆயுட்காலம் 100 வயதாக அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தற்போது ஏற்படும் சுகாதார ரீதியிலான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றது.

அத்துடன் அதிகரித்துவரும் சனத்தொகை தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமே இதற்கு முக்கிய காரணமெனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
« PREV
NEXT »

No comments