Latest News

February 13, 2012

போச்சே! ரஜினி பட விவகாரம் - தீபிகா புலம்பல்
by admin - 0


ஒரு படத்தை துவங்குவதற்கு முன் தயாரிப்பாளர் பல பிரச்சினைகளை சந்திப்பது கேள்விப்பட்டது தான். ஆனால் ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் கோச்சடையான் படத்திலோ ஆளுக்கு ஒரு பிரச்சினை.
சினேகா படத்திற்காக புக் செய்யப்பட்ட போது, அவர் ஒரு மளையால படத்தில் நடித்து முடிக்காமல் கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார் என ஒரு புகார் கிளம்பியது. அதன் பின் ஹீரோயின் செலக்ட் செய்வதில் தாமதமானது.

ஒரு வழியாக இதற்கு முன் ரஜினி நடிக்கவிருந்து கைவிடப்பட்ட ”ராணா” படத்திற்கு தேர்வு செய்யப்பட்ட தீபிகா படுகோனே இந்த படத்திற்காக புக் செய்யப்பட்டார். இப்போது எழுந்துள்ள பிரச்சினை தீபிகா படுகோனே பற்றியது தான்.

இந்தியில் தீபிகா நடிப்பதாக இருந்த ரேஸ்-2 படத்தை நடித்துக் கொடுக்காமல் கோச்சடையான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என ரேஸ்-2 படத்த்தின் தயாரிப்பாளர் ரமேஷ் தராணி நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

ரமேஷ் தராணி “ நான் 25 வருடமாக படம் தயாரித்து வருகிறேன். ஆனால் இப்படி ஒரு ஏமாற்றத்தை நான் அடைந்தது இல்லை. தீபிகா ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்போது படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்ரு கூறுகிறார். இவரால் படப்பிடிப்பு பாதிக்கப்ப்ட்டுள்ளது. எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் தான் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று தந்து புகாரில் கூறியுள்ளார்.

இது பற்றி பேட்டியளித்த தீபிகா ”ரேஸ்-2 படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டது உண்மை தான். ஆனால் படப்பிடிப்பை குறிப்பிட்ட காலத்தில் நடத்தி முடிக்காமல் ஒன்றரை வருடமாக இழுத்தடித்துவிட்டார்கள். இதனால் பல படங்களின் வாய்ப்பை நான் இழந்துவிட்டேன். இப்போது நான் நடிக்கவிருக்கும் கோச்சடையான் படத்திற்கு ராணா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட கால்ஷீட் தான் கொடுத்துள்ளேன். அவர்கள் அளித்துள்ள புகார் குறித்து நடிகர் சங்கத்தில் விரைவில் பதிலளிப்பேன்.” என்று கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments