டெஹ்ரான்:ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட எதிரி நாடுகள் தாக்குதல் நடத்துவதற்காக எந்த நாடாவது இடம் கொடுத்தால், அந்த நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என அந்நாட்டு ராணுவம் எச்சரித்துள்ளது.ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து,
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சந்தேகம் கொண்டுள்ளன. ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில், ஈரானின் தென்பகுதியில் நேற்று முன்தினம், அந்நாட்டின் ராணுவமான ஈரான் புரட்சிப் படை, இரண்டு நாள் போர் ஒத்திகையைத் துவங்கியது. இந்த ஒத்திகை சிறிய அளவில் தான் நடக்கும் என அந்நாட்டு பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.இதற்கிடையில், ஈரான் புரட்சிப் படையின் துணை தளபதி உசேன் சலாமி நேற்று விடுத்த அறிக்கையில், "எந்த நாடாவது ஈரான் மீது தாக்குதல் நடத்த, அமெரிக்கா உள்ளிட்ட எதிரி நாடுகளுக்கு இடம் கொடுக்குமானால், அந்த நாட்டின் மீது ஈரான் கடும் தாக்குதல் நடத்தும்' என எச்சரித்தார்.
No comments
Post a Comment