'பருப்பு இல்லாம சாம்பாரா... நமீதா இல்லாத சக்தி சிதம்பரம் படமா' என்று ரைமிங்கோடு கேட்கும் அளவு, நமீதா - சக்தி சிதம்பரம் கூட்டணி படு பாப்புலர் கோலிவுட்டில்.
ஆனால் என்ன நடந்ததோ... இடையில் ஒரு படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் நமீதா. இன்னொரு நமீதாவை உருவாக்கிக் காட்டுகிறேன் பார் என்று தொடை தட்டிய சக்தி சிதம்பரம், குருசிஷ்யன் படத்தில் ஹேமமாலினி என்பவரை உரித்த கோழியாகக் காட்டினார். ம்ஹூம்... யாரும் சீந்தவில்லை.
என்ன இருந்தாலும் நமீதா நமீதாதான் என்று மீண்டும் இப்போது நமீதா புராணத்தை ஆரம்பித்துள்ளார் சக்தி.
தனது அடுத்த படத்துக்கு 'நமீதா தமிழி'ன் முக்கிய வார்த்தையான மச்சான் என்பதையே தலைப்பாக்கியிருக்கிறார்.
இந்த தலைப்பை வைத்துவிட்டுத்தான் நமீதாவிடம் கால்ஷீட்டே கேட்டிருக்கிறார் சக்தி. பழசையெல்லாம் மறந்து படத்தில் நடிக்க நமீதா ஒப்புக் கொள்வாரா... அல்லது இன்னொரு விடுமுறை என்ற நினைப்பில் ஆம்பிவேலியிலேயே தங்கிவிடுவாரா என்பது இனிமேல்தான் தெரியும்!
No comments
Post a Comment