முதல்வர் ஜெயலலிதா பதவியேற்றவுடன் கோவை கலெக்டராக நியமிக்கப்பட்டார் கருணாகரன். மிகச் சிறப்பான செயல்பாடுகளாலும், நிர்வாகத் திறமையாலும் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். மக்கள் மத்தியில் அறியப்பட்டவராக மாறினார்.
ஆனால் தமிழகத்தை ஆட்டிப்படைத்து வந்த சசிகலா குரூப்பின் பாலிட்டிக்ஸில் கருணாகரன் பெயரும் இழுத்து வரப்பட்டது. ராவணனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருணாகரன் மீது சாயல் விழுந்தது. இதனால் அவர் பணிமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
நேர்மையான முறையில் செயல்பட்டு வந்தவரான கருணாகரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டது அனைவரிடத்திலும் ஒருவிதமான அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து தற்போது மீண்டும் கருணாகரனையே கோவை கலெக்டராக நியமித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இது கோவை பகுதியில் பெரும் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Post a Comment