ஆரம்பத்தில் அனிமேஷன் 3 டி படம் என்ற அளவுக்கு இருந்த கோச்சடையான் இப்போது ஒரு மெகா படமாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளது.
இந்தப் படத்தில் ஏற்கெனவே பெரிய நட்சத்திரங்கள் ரஜினியுடன் கை கோர்த்துள்ள நிலையில், இப்போது புதிதாக இணைந்துள்ளார் நடிகர் சரத்குமார். ரஜினிக்கு அடுத்து முக்கிய பாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார்.
'கோச்சடையான் ' படத்தின் இயக்குனரான செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டிவிட்டர் இணையத்தில் " கோச்சடையான் படத்தில் சரத்குமார் அங்கிள் நடிக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறோம். " என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ' ராணா ' படத்திலும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சினேகா ரஜினிக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஏற்கெனவே ஆதி, சினேகா உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. கேத்ரீனா நாயகியாக நடிக்கிறார்.
No comments
Post a Comment