தஞ்சாவூரில் நடராஜன் மருதப்பா அறக்கட்டளை சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழர் கலை இலக்கிய விழா நடத்தப்படுகிறது. போயஸ் கார்டனிலிருந்து சசிகலா குடும்பத்தினர் விரட்டப்பட்ட நிலையில் தஞ்சையில் இந்த விழா நடந்தது.
விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனும் விழாவில் பங்கேற்றார்.
அப்போது, முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்காக கூட்டத்திற்கு வந்தவர்களிடம் தனது கார்கள், வாட்சை விற்பதாக நடராஜன் அறிவித்தார்.
அதை அங்கிருந்தவர்கள் ரூ. 45 லட்சம் கொடுத்து வாங்க, அந்தப் பணத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனிடம் நடராஜன் வழங்கினார்.
இதையடுத்துப் பேசிய நடராஜன், இனிமேல் எனது சொந்த கார்களை பயன்படுத்த மாட்டேன், இனி எங்கு சென்றாலும், பொது வாகனத்தையே பயன்படுத்துவேன் என்றார்.
மேலும் தமிழர்கள் நலனுக்காகப் பாடுபட்டு வரும் பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோருக்கு தங்கப் பதக்கங்களையும், விருதுகளையும் அவர் வழங்கினார்.
No comments
Post a Comment