நக்கீரன் இதழில் கடந்த வாரம் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து ஒரு சர்ச்சைக்குரிய செய்தி வெளியிடப்பட்டது. இதனால் பிரச்சனை எழுந்தது. நக்கீரன் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. இந் நிலையில் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமாராஜ் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வர் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நக்கீரன் கோபால் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த இதழின் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
No comments
Post a Comment