Latest News

January 10, 2012

அன்னா குழுவினர் மீது பால்தாக்கரே கடும் தாக்கு
by admin - 0

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தியை நேற்று முன்தினம் கடுமையாக விமர்சனம் செய்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே, நேற்று அன்னா குழுவினரை கடுமையாக தாக்கி பேட்டி அளித்தார்.


இது தொடர்பாக அவரது கட்சி பத்திரிகையான சாம்னாவுக்கு அவர் அளித்த பேட்டியில்,


’’அன்னா குழுவில் இடம்பெற்றுள்ள கிரண்பேடி, அர்விந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோதியாக போன்றோர் ஒன்றுக்கும் உபயோகமில்லாத சுயநலவாதிகள். அரசாங்கத்தை ஏமாற்றுபவர்கள். சாந்தி பூஷன் விவகாரத்தில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அற்ப காரணங்களுக்காக அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இது அரசியல் பலாத்காரம் ஆகும். இந்த தேசத்தில் என்ன நடக்கிறது எனறே தெரியவில்லை.

லோக்பால் மசோதாவால் மக்களுக்கு பலன் ஏற்படாது. இந்த மசோதாவால் பல கமிட்டிகள் உருவாக்கப்படும். ஊழல்வாதிகள் மற்ற ஊழல்வாதிகளை விசாரித்துக் கொண்டிருப்பார்கள்.

மக்கள் தொடர்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். வேறு எதுவும் நடக்காது. உண்ணாவிரத போராட்டம் நடத்துவது இப்போது பேஷனாகி விட்டது. காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பவர்கள் உண்ணாவிரதம் முடித்தவுடன் தெம்பாக வெளிவருகிறார்கள்.

சரியான உணவு கிடைக்காமல் கட்டாய உண்ணாவிரதத்துக்கு தள்ளப்படும் லட்சக்கணக்கான குழந்தைகள் பற்றி யாருக்கும் கவலை இல்லை. மத்திய அரசு பலவீனமாக இருப்பதால் தான் இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன’’என்று கூறினார்.

« PREV
NEXT »

No comments