தியாகராயநகரில், விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள 26 வணிக வளாகங்களுக்கு கடந்த அக்டோபர் 30 ம் தேதி சிஎம்டிஏவும், மாநகராட்சியும் சீல் வைத்தது. இதனால் 500க்கும் மேற்பட்ட கடைகளில் வியாபாரம் நிறுத்தப்பட்டது. 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தி.நகர் வியாபாரிகள் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் பண்டாரி, தீபக் மிஸ்ரா, ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
தற்காலிகமாக திறக்கலாம்
மனுவை விசாரித்த நீதிபதிகள், சீல்வைக்கப்பட்ட கடைகளை தற்காலிகமாக 6 வாரங்களுக்கு வியாபாரத்திற்காக திறக்கலாம் என்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். வழக்கின் இறுதி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் இந்த வழக்கில் விசாரனையை முடிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment