Latest News

January 07, 2012

யாழில் இளம் குடும்பப் பெண் கிணற்றில் வீழ்ந்து மரணம்
by admin - 0

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடிப் பகுதியைச் சேந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

மனநலம் குன்றிய இவர் நோயின் கொடுமை காரணமாக கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நேரம் தேடிய போது இந்தப் பெண்ணுடைய சடலம் வயல் ஒன்றில் உள்ள கினற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது

ரவிச்சந்திரன் சரோஜினி (வயது 44) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர். இந்தப் பெண்ணின் சடலத்தை யாழ்.போதனா வைத்திய சாலையில் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

இந்தப் பெண்ணின் மரணம் தொரடப்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
« PREV
NEXT »

No comments