பொதுவாக இந்திய ராணுவ தேவைகளுக்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்த நிறுவனம், அவ்வப்போது புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகளையும் செய்கிறது.
இதன் ஒரு பகுதியாக, மனிதர்களின் உடல் தோலின் நிறம் சில இடங்களில் உருமாறி வெள்ளைத்தழும்புகளாக பரவிப்படறும் வெண்குஷ்டநோய்க்கு மூலிகை அடிப்படையிலான புதிய மருந்து ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மூலிகைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய மருந்து, பக்கவிளைவுகள் இல்லாதது என்றும், ஆரம்பகட்ட வெண்குஷ்டநோயை இந்த மருந்து மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும் என்றும் , இந்த மருந்து தயாரிப்பிற்கான ஆய்வில் ஈடுபட்ட இந்த நிறுவனத்தைச்சேர்ந்த மூத்த விஞ்ஞானி செல்வமூர்த்தி அவர்கள் தெரிவித்தார்.
No comments
Post a Comment