Latest News

January 15, 2012

ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சியில் அத்வானி
by admin - 0

சென்னையில் நேற்று (14.1.2012) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி,தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல.கணேசன், இந்து முன்னணி ராம.கோபாலன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பாலசந்தர், எழுத்தாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அத்வானி பேசும்போது, ‘’ பார்லிமென்டில் பா.ஜ., பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. மத்திய அரசின் தவறான செயல்பாடுகளைக் கண்டிக்கும் பிரச்னைகளில், அ.தி.மு.க., எங்களுக்கு எந்தக் குறைவுமற்ற, முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது. இந்த இடத்தில் நான், ஒன்றை தெளிவுபடுத்திட விரும்புகிறேன். அ.தி.மு.க.,வும், நாங்களும் இயல்பான கூட்டணியாக இருக்கிறோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மத்திய, மாநில அரசுகளின் உறவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில், பா.ஜ.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் பொதுவான கொள்கைகள் நிறைய இருக்கின்றன. மற்றபடி, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை, இப்போதே அறுதியிட்டுக் கூறிவிட முடியாது’’என்று தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments