Latest News

January 15, 2012

மீண்டும் ஒரு டைட்டானிக் அவலம்!
by admin - 0

ஆயிரக் கணக்கான பயணிகளுடனும் சொகுசு வசதிகளுடனும் இத்தாலிக் கடலில் பயணித்த பிரமாண்டமான கப்பல் ஒன்று எதிர்பார்த்து இராத விதமாக பாரிய விபத்தில் அகப்பட்டு உள்ளது. இக்கப்பலில் 3200 பயணிகள், 1000 சிப்பந்திகள் வந்திருக்கின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பயணத்தை ஆரம்பித்து இருந்தனர். பயணத்தை ஆரம்பித்து மூன்று மணி நேரத்தின் பின் தீவு ஒன்றில் வைத்து பாறையுடன் கப்பல் மோதுண்டது. கப்பல் நீரில் மூழ்கத் தொடங்கியது. குறைந்தது மூவர் இறந்தனர் என்றும் பல்லாயிரக் கணக்கானோர் மீட்புப் பணியாளர்களால் காப்பாற்றப்பட்டு உள்ளனர் என்றும் உடனடிச் செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்புப் படகுகள் மற்றும் மீட்புப் ஹெலிகெப்டர்கள் உடனடி சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. ஆயினும் மீட்புப் பணியாளர்கள் அசிரத்தையாக நடந்து கொண்டனர் என்றும் ஆபத்தில் சிக்கி இருந்த பயணிகளுக்கு சரியான முறையில் அறிவுறுத்தல்கள் வழங்க தவறினர் என்றும் தப்பிப் பிழைத்த சிலரால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன. தப்பிப் பிழைத்த பயணிகளில் ஒருவர் இவ்விபத்துக் குறித்த திகில் அனுபவத்தை விபரிக்கையில் இரவுச் சாப்பாட்டை உண்டு கொண்டிருந்த நேரம் திடீரென மின்சாரம் நின்று விட்டது, கப்பல் ஏதோ ஒன்றுடனோ மோதுப்பட்டது போல மனதில் தோன்றியது, தொடர்ந்து பாரிய சத்தம் கேட்டது.... ஆரம்பத்தில் மின்சார கோளாறு என கூறப்பட்டது, டைட்டானிக் கப்பலுக்கு ஏற்பட்ட பாரிய விபத்தைப் போலதான் இவ்விபத்தையும் உணர்கின்றேன் என்றார்.
« PREV
NEXT »

No comments