Latest News

January 17, 2012

விண்வெளியினில் வெடித்து சிதறிய ரஸ்யா விண்கலம் வடமராட்சியின் இன்பருட்டி கரையோரப்பகுதியினில் வீழ்ந்ததா?
by admin - 0

விண்வெளியினில் வெடித்து சிதறிய ரஸ்யா விண்கலம் வடமராட்சியின் இன்பருட்டி கரையோரப்பகுதியினில் வீழ்ந்ததாவென சந்தேகம் எழுந்துள்ளது. இன்று பிற்பகல் வேளை வடமராட்சியின் இன்பருட்டி கடற்பரப்பினில் பெரும் தீச்சுவாலையொன்று ஏற்பட்டிருந்தது. சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக பெரும் தீச்சவாலையும் கடல் நீர் சிதறி வீசப்படுவதையம் கரையோரப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.

கடலில் பெரும் பிரகாசத்துடன் தீப்பற்றி எரிந்தது என்னவென்பது தெரியாது மக்கள் அச்சத்துடன் கரையோரப்பகுதிகளில் ஒன்று குவிந்து வேடிக்கை பார்த்தவண்ணமிருந்தனர். சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கும் படையினருக்கும் தகவல்கள் வழங்கப்பட்டிருந்தது. அவர்களும் நேரினில் வந்து வேடிக்கை பார்த்துவிட்டு திரும்பி விட்டனர்.

மக்களிடையே சம்பவம் தொடர்பினில் அச்சமான சூழ்நிலையொன்றே காணப்பட்டது. எனினும் தீச்சுவாலை காணப்பட்ட இடத்திற்கு மீனவர்கள் சிலர் படகுகளினில் சென்று பார்வையிட்ட போது அப்பகுதியினில் தீ அணைந்திருந்தது.

இந்நிலையினில் விண்வெளியினில் வெடித்து சிதறிய ரஸ்ய விண்கலமே இப்பகுதியினில் வீழ்ந்திருக்கலாமென ஊகங்கள் இரவு வெளியாகியிருந்தது. விண்வெளியினில் வெடித்து சிதறிய ரஸ்ய விண்கலம் இன்று அல்லது நாளை இந்து சமுத்திரப்பகுதியினில் வீழ்ந்து வெடிக்கலாமென கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் பீடாதிபதி கலாநிதி சந்தன ஜயரட்ண தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
« PREV
NEXT »

No comments