Latest News

January 10, 2012

தேயிலை கொழுந்துகளுக்கும் பிளாஸ்டிக் கூடைகள் கட்டாயம்
by admin - 0

பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்துகளை கொண்டுச் செல்வதற்கு பிளாஸ்டிக் கூடைகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் பிரதியமைச்சர் ஏர்ள் குணசேகர இன்று தெரிவித்துள்ளார்.



இலங்கை தேயிலையின் உயர்ந்த தரத்தினைப் பேணும் நோக்கத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தோட்டங்களில் பறிக்கப்பட்ட தேயிலைகளை கொண்டு செல்லும் போது 30 வீதமான தேயிலைகள் பயனற்றுப் போவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு முன்னதாக மரக்கறிகள் மற்றும் பழங்களை பிளாஸ்டிக் கூடைகளில் கொண்டு செல்ல வேண்டும் என எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு வியாபாரிகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இம்மாதம் 15ஆம் திகதி இச் சட்டம் கட்டாயமாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments