யாழ் மாநகர சபை பொது சுகாதாரப் பகுதியினர் யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வடிகால்களை சிரமைப்பதில்லை எனவும் கழிவுகளை ஒழுங்காக அகற்றுவதில்லை இதன் காரணமாக டெங்கு தாக்கம் அதிகரித்து வருவதாக குற்றச் சாட்டுக்களை முன் வைத்து யாழ்ப்பாணத்து பொலிஸார் யாழ் நீதவான் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே, யாழ் மாநகர சபை பொதுக்கூட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாநகரசபை நிர்வாகம் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவரும் நிலையில் யாழ் பொலிஸாரும் தற்போது குற்றச்சாட்டை முன்வைத்து நீதிமன்றில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குறித்த வழக்கு தொடர்பாக யாழ் மாநகர சபை நாளை யாழ் நிதவான் நீதிமன்றில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளனர்.
No comments
Post a Comment