Latest News

January 25, 2012

எம்ஜிஆர் சமாதியில் அதிமுக பிரமுகர் தீக்குளித்து மரணம்
by admin - 0

உசிலம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் இன்று காலை எம்ஜிஆர் சமாதியில் திடீரென தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி உள்ளது. இன்று காலை 6.30 மணி அளவில் சமாதியின் நுழைவா யில் கேட்டை செக்யூரிட்டி வஜ்ஜிரம் திறந்தார். அப்போது 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பையுடன் உள்ளே நுழைந்தார். சமாதியை சுற்றிப் பார்த்த அவர், பின்புறத்தில் உள்ள புல்தரைக்கு சென்று அமர்ந்தார்.


சிறிது நேரம் கழித்து பையில் இருந்த கேனை எடுத்தார். அதில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

வலி தாங்க முடியாமல் அலறினார். பின்னர் ‘எம்ஜிஆர் வாழ்க’ என்று கோஷம் போட்டபடியே அங்கும் இங்கும் ஓடினார்.சத்தம் கேட்டு செக்யூரிட்டி வஜ்ஜிரம் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.


பின்னர் அண்ணாசதுக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் குணசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீக்காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீக்குளித்தவரின் பை யை சோதனை செய்ததில் சில மனுக்கள் இருந்தன. அவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த நாகேந்திரன் என்று தெரிந்தது. பையில் இருந்த மனுக்கள், மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மீது புகார் கூறி, கட்சி தலைமைக்கு எழுதப்பட்டிருந்தன.

அதிமுக பிரமுகரான நாகேந்திரன், உசிலம்பட்டியில் பலரை கட்சியில் இணைத்துள்ளார். அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்படவில்லை என்றும், மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டபோது சரியாக பதில் கூறவில்லை என்றும் கட்சிக்காக இத்தனை ஆண்டுகள் உழைத்தும் பயனில்லையே என்ற மனவருத்தத்தில் தீக்குளித்தாகவும் போலீசாரிடம் நாகேந்திரன் கூறியுள்ளதாக தெரிகிறது.

ஆபத்தான நிலையில் நாகேந்திரனுக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். எம்ஜிஆர் சமாதியில் அதிமுக பிரமுகர் தீக்குளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
« PREV
NEXT »

No comments