மெரேயா கேம்ரி தோட்டத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தெப்பக்குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று நேற்று இரவு 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
மெரேயா கேம்ரி மேற்பிரிவைச் சேர்ந்த குமாரவேல் ரவி என்ற இளைஞன் மது போதையுடன் இரவு வேளை வீட்டுக்குச் சென்று வீட்டாருடன் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளான்.
அதன் போது அந்த இளைஞன் அருகிலுள்ள தெப்பக்குளத்தில் பாய்ந்து விடுவதாக கூறியுள்ளார். இதன் பின்பு அந்த இளைஞன் திடீரென அந்தக்குளத்தில் பாய்வதற்கு ஓடிய போது அயலவர்கள் அந்த இளைஞனைத் துரத்திச் சென்றுள்ளனர்.
எனினும் அந்த இளைஞன் வேகமாக ஓடிச் சென்று குளத்தில் குதித்துள்ளான். இதன் பின்பு மூச்சித்திணறி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இளைஞனின் சடலத்தினை இன்று முற்பகல் பொது மக்கள் மீட்டெடுத்துள்ளனர்.
இந்தச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Post a Comment