Latest News

January 22, 2012

'ட்ரகுலா' குரங்கினம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது (காணொளி இணைப்பு) _
by admin - 0

பூமியில் இருந்து முற்றாக அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட 'மிலர்ஸ் கிரிஸ்லெட் லெங்குர்' (Miller's Grizzled Langur) என்ற குரங்கினமானது போர்னியோ தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை சைமன் ப்ரேசர் என்ற கனேடிய நாட்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அக்குரங்குகளின் புகைப்படங்களையும் தமது கண்டுபிடிப்புக்கான ஆதாரமாக வெளியிட்டுள்ளனர்.

இக் குரங்குகளின் முகத்தோற்றமானது 'ட்ரகுலாவை' ஒத்திருப்பதால் இவை 'ட்ரகுலா' குரங்குகள் என அழைக்கப்படுகின்றன.

இத்தகவலானது விலங்கியல் ஆய்வாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துமென இவற்றைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

போர்னியோ (Borneo) உலகின் மூன்றாவது பெரிய தீவாகும். இதன் பரப்பளவு 743,330 கிமீ² (287,000 சதுர மைல்கள்). இது மலே தீவுக் கூட்டங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது.

அத்தீவின் கிழக்கு கலிமண்டான் பகுதியின் வீய்யா காட்டுப்பகுதியிலேயே இக்குரங்கினம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ் அடர்ந்த காட்டுப்பகுதியானது அதிகமாக மனிதர்கள் உள்நுழையாத பகுதியெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பகுதியில் பல அரிய விலங்குகள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
« PREV
NEXT »

No comments