Latest News

January 22, 2012

சுண்டிக்குளம் கல்லாறு கடல் நீரேரியில் 10 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன
by admin - 0


கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இறால் இருப்பு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் வட மாகாணசபையின் நிதி பங்களிப்பில் இன்றைய தினம் பத்து இலட்சம் இறால் குஞ்சுகள் சுண்டிக்குளம் கல்லாறு கடல் நீரேரியில் விடப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து வரும் கிழமைகளில் தட்டுவன்கொட்டி ஆனையிறவு நாகேந்திரபுரம் கடல் நீரேரிகளிலும் இறால் குஞ்சுகள் விடப்படவுள்ளன.

ஒட்டுமொத்தமாக 250 இலட்சம் இறால் குஞசுகள் மேற்படி கடல் நீரேரிகளில் விடப்படவுள்ளன. இதற்காக வட மாகாண சபை 13.65 மில்லியன் ரூபாவை செலவு செய்கின்றது.

இன்று இறால் குஞ்சுகள் விடும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், தேசிய நீரியல் வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் நிமல் சந்திரரட்ண, அந்நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி.அசோகா, வடமாகாண மீன்பிடித்திணைகள பணிப்பாளர் மயூரன், கிளிநொச்சி மாவட்ட அரச செயலக உதவித்திட்டப்பணிப்பாளர் கேதீஸ்வரன், மாவட்ட மீன்பிடித்திணைக்கள உதவிப்பணிப்பாளர் கனேசமூர்த்தி, கூட்டுறவு உதவி ஆணையாளர் தவராசா மற்றும் கடற்றொழிலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இறால் குஞ்சுகளை கடல் நீரேரியில் விட்டனர்.
« PREV
NEXT »

No comments