Latest News

January 10, 2012

யாழ் ரயில் நிலைய விடுதிகளில் தங்கிருப்போரை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது
by admin - 0

யாழ். ரயில் நிலைய விடுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


ரயில் நிலைய புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அங்கு தங்கியுள்ளவர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

யாழ்.ரயில் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான விடுதிகளில் சுமார் 30 வருடங்களாக தாம் வாழ்ந்து வருவதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

ரயில்வே திணைக்களத்தில் கடமையாற்றியவர்களின் பிள்ளைகளே இந்த விடுதிகளில் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த ரயில் நிலைய விடுதிகளை விட்டு வெளியேறுமாறு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும் அவர்கள் அங்கிருந்து வெளியேறவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் எதிர்வரும் இரு தினங்களில் அவர்களை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமக்கு சொந்த காணிகள் இல்லாத காரணத்தினால் உரிய வசதிகளை ஏற்படுத்தி தருமாறு அந்த மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் நாம் வினவிய போது, குறித்த பகுதியில் சட்டவிரோதமாக இவர்கள் தங்கியுள்ளதாகவும் , இவர்களை வெளியேற்றுமாறும் போக்குவரத்து அமைச்சு தன்னிடம் கோரிக்கை விடுத்தாகவும் குறிப்பிட்டார்.

இதற்கமைய தாம் இந்த உத்தரவை விடுத்ததாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் கூறினார்.
« PREV
NEXT »

No comments