நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட திருநெல்வேலி சந்தையின் இரண்டாம் மாடிக் கட்டடம் 85 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள மரக்கறிச் சந்தையானது கீழ் மாடியிலேயே இடம்பெறுகிறது. இதனால் மரக்கறிகளில் மண், தூசு போன்ற அழுக்குகள் படிவதாக மக்களும் வியாபாரிகளும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதனால் மக்களது சுகாதாரத்தை பாதிக்கும் இதனைக் கருத்திற் கொண்டே இரண்டாம் மாடிக்கு சந்தை மாற்றப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வியாபார நடவடிக்கை இடம்பெறும் பகுதி வாகனங்கள் நிறுத்துவதற்குரிய இடமாக ஒதுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொக்குவில் குளப்பிட்டி சந்தைக்கென இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய கட்டம் ஒன்றும் நிர்மானிக்கப்படவுள்ளது.
இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளுக்கு 22 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கட்டட நிர்மாண பணிகள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட்டு புதிய சந்தை மக்களது பாவனைக்காக திறந்து விடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நல்லூர் பிரதேச சபையினால் சந்தையில் சுமைதூக்குபவர்களுக்கு சீருடை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான நிதி ஒதுக்கீட்டினை பிரதேச சபை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment