இது குறித்து அவர் இஸ்ரேல் நாட்டு நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது,
அல் கொய்தா தலைவர் ஒசாமா பாகிஸ்தானில் 5 ஆண்டுகள் இருந்தாராம். அதுவும் எனது ஆட்சிக் காலத்தில் 2 ஆண்டுகள் இருந்தாராம். ஆனால் அது எனக்கு தெரியவே தெரியாது. நான் சொல்வது முற்றிலும் உண்மை.
ஒசாமா பாகிஸ்தானில் இருந்தபோது தொலைபேசியை பயன்படுத்தவில்லை. அவர் தங்கியிருந்த பகுதி மக்களுக்கே அவர் அங்கிருந்தது தெரியாது. அவர் வசித்த வீட்டுக்கு அருகே வசிக்கும் அக்கம்பக்கத்தினருக்கே அவர் அங்கிருந்தது தெரியாது.
ஒசாமா உயரமான சுற்றுச்சுவருள்ள பெரிய வீட்டில் தங்கியிருந்தார் என்று மேற்கத்திய நாடுகளில் பேச்சு உள்ளது. ஆனால் அது உண்மையில்லை.
பாகிஸ்தானில் ஒருவர் வீடு கட்டினால் சுற்றுச்சுவர் கட்டுவது வழக்கம். இது மேற்கத்திய நாடுகளுக்கு வேண்டுமானால் வித்தியாசமாகத் தெரியலாம். எங்களுக்கு அப்படித் தெரியவில்லை. சந்தேகமும் ஏற்படவில்லை என்றார்.
No comments
Post a Comment