Latest News

January 02, 2012

வந்தாரய்யா வடிவேலு, வந்து நொந்தாரய்யா...!
by admin - 0

இந்த ஆண்டின் பெரிய நொம்பலம் எது என்றால் அது வடிவேலாகத்தான் இருக்க முடியும். காமெடிப் புயலாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனதில் பெரிய சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருந்த வடிவேலுவை, தேரை இழுத்துத் தெருவில் விட்ட கதையாக விஜயகாந்த்துக்கு எதிராக களம் இறக்கி இன்று ஒரு படத்தில் நடிக்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளி விட்டு விட்ட���ு திமுக. 2011 ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுக சார்பில் பிரதான பிரச்சார பீரங்கியாக களம் இறக்கப்பட்டார் வடிவேலு. விஜயகாந்த்தைக் குறி வைத்து அவரை களம் இறக்கியது திமுக. வடிவேலுவும் சும்மா இருக்கவில்லை, நன்றாகவே 'கூவினார்'.ஊர் ஊராகப் போய் விஜயகாந்த்தை நார் நாராக, டார் டாராக கிழித்தெடுத்தார். விஜயகாந்த் பிரசாரத்தின்போது செய்த சின்னச் சின்ன தவறுகள��யும் கூட பெரிதாக்கி, பூதாகரமாக உருப்பெருக்கி அவர் செய்த பிரசாரத்திற்கு செமத்தியான வரவேற்பு. இடையில் விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளரை அடித்து விட்டார். இதை வடிவேலு கையில் எடுத்துக் கொண்டு செய்த எதிர் பிரசாரம் இருக்கிறதே, அடேங்கப்பா, கடந்த தேர்தல் பிரசாரத்தில் டாப் ஸ்டாராக விளங்கியவர் வடிவேலுதான். வடிவேலுவை சமாளிக்க முடியாமல் அதிமுக தரப்பு சற்றே திணறித்தான் போனத���. கருணாநிதிக்குக் கூடும் அளவுக்கு வடிவேலுவுக்கும் கூட்டம் கூடியதைக் கண்டு அனைவருமே ஆச்சரியப்பட்டனர். ஆனால் அவரது பிரசாரமும், பேச்சுக்களும், தனி நபர் விமர்சனங்களும் திமுகவுக்கு பெரும் பாதகமாகி விட்டன. தேர்தல் முடிவு அதைத்தான் காட்டியது. சட்டசபைத் தேர்தலி்ல அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்று வடிவேலுவால் கடுமையாக திட்டப்பட்ட விஜயகாந்த், எதிர்க்கட்சித் தலைவர���கவும் உயர்ந்தார். தேர்தல் முடிவு வந்த அன்று பேட்டி கொடுத்ததோடு சரி, அதற்குப் பிறகு இந்த ஆண்டின் இறுதி வரை வடிவேலுவைக் காணவில்லை. அவர் எந்தப் புதிய படத்திலும் நடிக்கவில்லை - ஏற்கனவே திமுக ஆட்சியின்போது ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்த மம்பட்டியானைத் தவிர.
« PREV
NEXT »

No comments