அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் பெர்கோவிட்ஜ் 181 கிலோ உடற்எடை கொண்டவர். முன்னணி தொழிலதிபரான இவர் சமீபத்தில் ஆன்கரேஜ் நகரிலிருந்து பிலடெல்பியா நகருக்கு செல்ல யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனத்தை நாடியுள்ளார். பிளைட் 901 விமானத்தில் ஏறிய அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை போதுமானதாக இல்லை.
எனவே, அவரை கடைசியில் உள்ள இருக்கைக்கு சென்று அமருமாறு விமான ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர். பெர்கோவிட்ஜிற்கு அந்த இருக்கையும் போதுமானதாக இல்லை. அவர் உட்கார்ந்தால், பக்கத்து இருக்கையையும் அடைத்துக் கொள்கிறார் என்று மற்ற பயணிகள் புகார் தெரிவிக்கவே, விமான ஊழியர்கள் அவரை நி்ன்று கொண்டே வருமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து, அவர் தொடர்ந்து 7 மணிநேரமாக நின்று கொண்டே பயணம் செய்து பிலடெல்பியா வந்தடைந்துள்ளார்.
இதனால் மனவருத்தமுற்ற பெர்கோவிட்ஜ் இந்த பயணம், எனக்கு மறக்கமுடியாத சோகத்தை அளித்துள்ளது என்று தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.
தான் இப்படி நடத்தப்பட்டதன் மூலம் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன் என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, யுஎஸ் ஏர்வேஸ் பெர்க்கோவிட்ஜிடம் மன்னிப்பு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment