Latest News

January 19, 2012

இன கலவரம்: 49 பேர் படுகொலை
by admin - 0

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் சமீபத்தில்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்டு, சுதந்திரம் அடைந்தது.





பழங்குடியினர் அதிகம் வசிக்கும் அந்த நாட்டில் அடிக்கடி இன கலவரம் நடப்பது உண்டு.

அங்கு பிங்ளே மாகாணத்தில் ஒரு கிராமத்தில் இன்று இரு பிரிவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் ஒரு பழங்குடியினர் தாக்கியதில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

6 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். கடந்த ஆண்டு நடந்த இன கலவரத்தில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.
« PREV
NEXT »

No comments