Latest News

January 08, 2012

மோட்டார்வண்டி விபத்தில் 4வயது சிறுமி உட்பட இருவர் பலி
by admin - 0

வவுனியா ஹொரப்பொத்தான பிரதான வீதியின் குடாகச்சகுடிய இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார்வண்டி ஒன்றும் ரக்டர்வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

மோட்டார் வண்டியில் பயணித்த இருவருமே உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 4 வயதுச் சிறுமி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்திற்கு காரணமானவர் என கருதப்படும் ரக்டர் சாரதியை கைது செய்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
« PREV
NEXT »

No comments