மக்களை நாய்க்கடியிலிருந்து, ரேபீஸ் எனப்படும் வெறிநாய்க்கடி நோயிலிருந்தும் காப்பாற்றும் முயற்சியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.தெரு நாய்களுக்கு ரேபீஸ் கிருமித் தொற்று வராமல் தடுக்க அரசு எடுத்த முயற்சிகள் பலன் தராமல் போய்விட்டது என இலங்கை சுகாதார அமைச்ச்சர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாய்கள் மனிதர்களைக் கடிப்பது என்பது பொரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது என்றும் நாள்தோறும் இரண்டாயிரம் பேர் வரையிலானோர் நாய்க்கடிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
நாய்களைக் கொல்லும் அரசின் திட்டத்தை மிருக உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.
அதிகாரிகள் ஒழுங்காக நடைமுறைப்படுத்தாமல் போனதாலேயே நாய்கள் மத்தியில் ரேபீஸ் பரவியதை தடுக்க முடியாமல் போனது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாள்தோறும் இரண்டாயிரம் பேர் வரையிலானோர் நாய்க்கடிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் "
சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிறிசேன
No comments
Post a Comment