Latest News

January 23, 2012

சீனாவில் பறவை காய்ச்சலுக்கு 2 பேர் பலி
by admin - 0

சீனாவில் பறவை காய்ச்சல் நோய்க்கு 2 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் கடந்த 18 மாதங்களாக அதாவது 1 1/2 ஆண்டுகளாக பறவை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. அதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தும் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.

பறவை காய்ச்சல் நோய் பாதித்த பஸ் டிரைவர் ஒருவர் கடந்த டிசம்பர் 31-ந்தேதி உயிரிழந்தார். அவர் குவாங்டங் மாகா ணத்தின் தெற்கு பகுதியை சேர்ந்தவர். இந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் பலியாகி உள்ளார்.

குய்சூ மாகாணத்தை சேர்ந்த அவர் கடந்த 6-ந்தேதி முதல் காய்ச்சலால் அவதிப்பட்டார் எனவே, அவரை பரிசோதித்த டாக்டர் பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் எச் 5 என் 1 என்ற வைரஸ் கிருமி தாக்கி இருப்பதாக கூறினார். எனவே இவரை குய்யாங் நகர ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இவரையும் சேர்த்து சீனாவில் பறவை காய்ச்சலுக்கு இறந்தவர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. தற்போது கிழக்கு ஆசிய நாடுகளான சீனா, வியட்னாம், இந்தோனேசியா, மற்றும் கம்போடியாவில் பறவை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. அங்கு பலியானவர்கள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
« PREV
NEXT »

No comments