Latest News

January 23, 2012

உலகை ஒற்றை நபராக படகில் சுற்றிவந்த 16 வயது பெண்! – புதிய சாதனை (வீடியோ இணைப்பு)
by admin - 0

உலகை ஒற்றைக்கப்பல் மூலம் சுற்றி வலம் வந்த மிக இளம் வயது நபராக லாரா டெக்கர் (Laura Dekker) எனும் நெதர்லாந்து இளம் யுவதி புதிய சாதனை படைத்துள்ளார். 16 வயது மட்டுமே நிரம்பிய லாரா சுமார் ஒருவருடமாக மேற்கொண்ட இச்சுற்று பயணத்தின் முடிவில் கரிபியன் தீவுகளில் உள்ள புனித மார்டென் துறைமுகத்தில் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டார். அவரை அவரது குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்.


கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 20 ம் திகதி 11.5 மீற்றர் நீளம் கொண்ட தனது படகில் பயணத்தை ஆரம்பித்தார். 15,000 கி.மீ மேல் கடலில் பயணித்துள்ளார். முதலில் அவர் தனியாக செல்வதை அவரது தாயார் விரும்பவில்லை. நெதர்லாந்து சமூக வலைத்தளங்களும், அவரது பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்றிருந்தன. லாரா தனது படகு பயணத்தின் போது தனக்கேற்படும் அனுபவங்களை உடனுக்குடன் பதிந்து கொள்ள வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்தார். இது இளம் சமூகத்திற்கு நல்லதல்ல. அவர்களின் மனதில் தேவையில்லாத விபரீத ஆசைகளை ஏற்படுத்திவிடக்கூடியது என நெதர்லாந்து சமூக வலைத்தளங்கள் தெரிவித்திருந்தன. எனினும் நீதிமன்ற தீர்ப்பு லாராவுக்கு சாதகமகவே இருந்தது. சாதிக்க துடித்த லாராவை அவரது தாயாரும் தைரியமாக வழியனுப்பி வைத்தார். இப்போது உலகை தண்ணீரில் சுற்றிவந்த மிக இளம்வயது நபராக லாரா சாதனை படைத்துள்ளார். ஆனால் அவரது சாதனையை கின்னஸ் குழுவினரோ, வேறு கடல் பிரயாண துறையினரோ உத்தியோகபூர்வமாக பதிந்து கொள்ள முடியாது என தெரிவித்துவிட்டனர்.
இளம் வயது காரர்களிடையே இந்த ஆபத்தான படகுபிரயாணம் செய்யும் ஆசையை தூண்டுவதற்கு காரணியாக இப்பதிவு இருந்துவிட கூடாது என்பது அவர்கள் வாதம்.
« PREV
NEXT »

No comments