சென்னை கே.கே. நகரைச் சேர்ந்தவர் துரைவேலன் என்பவர் நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
அந்த மனுவில், அரும்பாக்கம் புலியூர் பகுதியில் எனக்கு சொந்தமான ரூ. 1 கோடி நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து நடிகர் மன்சூர்அலிகான் அபகரித்து விட்டார். எனவே, உரிய நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து துணை கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் நில மோசடிப் பிரிவு உதவி கமிஷனர் ஜேசுராஜன் மற்றும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள மனசூர் அலி கான் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து கமிஷனர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
அங்கு அவரிடம் நிலமோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
No comments
Post a Comment