கோச்சடையன் படத்துக்காக கடந்த புதன்கிழமை தொடங்கி மூன்று நாட்களாக மோசன் கேப்சரிங் முறையில் ரஜினி நடித்து வருகிறார். சௌந்தர்யா ரஜினிக்கு சொந்தமாக ஸ்டூடியோவுக்கு சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆக்கர்ஸ் அனிமேஷன் ஸ்டூடியோவில் இந்த படப்பிடிப்பு நடந்து வருகிறது.இதை படப்பிடிப்பு என்று சொல்லக் கூடாது என்கிறார்கள். ஏற்கனவே 2டி முறையில் பென்சில் ஸ்கெச்சாக வரையப்பட்டு, பிறகு க்ளே மாடலாக அதைக்கொண்டு உருவாக்கப்பட்ட கோச்சடையன் கேரக்டரின் உருவம் மினியேச்சராக 5டி கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு கம்ப்யூட்டரில் ஏற்றப்பட்டு, அதை 3டி முறையில் வடிவமைத்து முடித்திருகிறாரார்களாம்.
தற்போது ரஜினி, கம்யூட்டருடன் பொருத்தப்பட்ட எலெக்ட்ரோ மேக்னட் ஒயர்களை உடலின் பல இடங்களில் பொருத்திக் கொண்டு ஸ்டைலாக நடப்பது, தளர்வாக நடப்பது, ஓடுவது, குதிப்பது கைகளை அசைப்பது, என ரஜினியின் உடல்மொழிகளை மோசன் கேப்சரிங் மூலம் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வருகிறார்களாம்.
ரஜினி ராணாவுக்கு பிறகு நடிப்பாரா மாட்டாரா என்ற நிலையில், தற்போது ரஜினியிடமிருந்து எடுத்துக் கொள்ளப்படும் உடல் மற்றும், அங்க அசைவுகள், முக அசைவுகள் சிரிப்பது ஆகிய மோசன்களை வைத்துக் கொண்டு ரஜினி இல்லாமலேயே இரண்டாயிரம் படங்களைக் கூட எடுக்க முடியும்.
அதனால்தான் ரஜினி நல்ல உடல்நிலையில் இருக்கும்போதே மோசன் கேப்சரிங் நுட்பத்தில் ரஜினியை ஆவணபடுத்த சௌந்தர்யா துடிக்கிறார் என்கிறார்கள் அவரது ஆக்கர் ஸ்டூடியோவில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பலரும்!
No comments
Post a Comment