Latest News

December 19, 2011

சீமான் கைது
by admin - 0

முல்லைப் பெரியாறு அணையை உடைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாடு புளியரை எல்லை வழியாக கேரளாவிற்குள் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும், கொண்டு செல்லக் கூடாது என்பதை வலியுறுத்தி இன்று மதியம் 12 மணி அளவில் புளியரை சோதனை சாவடி அருகே, நாம் தமிழர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில், நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். முல்லைப் பெரியாறு அணையை உடைக்கக் கூடாது, தமிழரின் உரிமையை பெற்றாக வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 157 பேர் கைது செய்யப்பட்டனர்.
« PREV
NEXT »

No comments